மஞ்சூர் அருகே: குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமை - பொதுமக்கள் பீதி


மஞ்சூர் அருகே: குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமை - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 3 Dec 2018 3:30 AM IST (Updated: 2 Dec 2018 11:37 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமையால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

மஞ்சூர்,

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காட்டெருமை மற்றும் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியை ஒட்டி உள்ள தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் நடமாடி வந்த அவை, தற்போது குடியிருப்பு பகுதியில் உலா வர தொடங்கி விட்டன. இந்த நிலையில் நேற்று மாலை மஞ்சூர் அருகே கொட்ரகண்டி என்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தது.

பின்னர் அந்த காட்டெருமை திடீரென குடியிருப்பு பகுதியில் நுழைந்து உலா வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு தங்களது வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.

அரை மணி நேரத்துக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமை, அதன்பிறகு அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சூர் மின்வாரிய மேல் முகாமில் கரடி உலா வந்தது. கரடி மற்றும் காட்டெருமை நடமாட்டம் தொடர்ந்து வருவதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story