சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்து ரத்தம் வழிந்ததால் பரபரப்பு போலீஸ் விசாரணை
ஊரப்பாக்கம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்து ரத்தம் வழிந்ததால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே, ஜி.எஸ்.டி சாலை ஓரமாக நேற்று மாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரின் கதவு வழியாக ரத்தம் வழிந்தபடி இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தந்தனர்.
உடனே வண்டலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காரின் கதவை திறந்து பார்த்த போது பின்புற இருக்கையிலும் ரத்தம் சிதறிக் கிடந்தது. அந்த காரின் பின்பக்கத்தில் பதிவு எண் எழுதப்படவில்லை. முன்பக்கத்தில் எழுதப்பட்டு இருந்த எண்ணும் உண்மையானதா? என்று தெரியவில்லை.
எனவே அந்த காரை கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த காரில் வைத்து யாரையாவது கொலை செய்து அருகில் உள்ள முட்புதரில் உடலை வீசி உள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வரும் போலீசார், கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள முட்புதர்களில் தேடி வருகின்றனர்.
முன்னதாக செங்கல்பட்டை அடுத்த படாளம் பகுதியில் இருந்து ஒரு வாலிபரை மர்ம நபர்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. எனவே கடத்தப்பட்ட நபரை அவர்கள் காரில் வைத்து கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
ஜி.எஸ்.டி. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்து ரத்தம் வழிந்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story