தந்தை-மகனை தாக்கிய வாலிபர் கைது
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசாமி (வயது 49).
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசாமி (வயது 49). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனது மகன் தினேஷ்குமாருடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அதே தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஜவகர்(24) முன்விரோதம் காரணமாக தவசாமியையும், தினேஷ்குமாரையும் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து ஜவகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story