திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.30 லட்சத்தில் கபடி மைதானத்துக்கான பணிகள் தீவிரம்


திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.30 லட்சத்தில் கபடி மைதானத்துக்கான பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 2 Dec 2018 10:45 PM GMT (Updated: 2 Dec 2018 8:51 PM GMT)

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.30 லட்சத்தில் கபடி மைதானத்துக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 3 மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

திருச்சி,

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் காலை, மாலை நேரங்களில் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இது தவிர, பொதுமக்கள் பலர் நடைபயிற்சிக்காக அதிகாலை நேரங்களில் அண்ணா விளையாட்டு மைதானத்துக்கு வந்து செல்கிறார்கள். அங்கு சிந்தெடிக் ஓடுதளம், டென்னிஸ் அரங்கம், நீச்சல் குளம், கூடைப்பந்து, கைப்பந்து மைதானம், உள்விளையாட்டு அரங்கு என பல வசதிகள் உள்ளன.

இந்தநிலையில் புதிதாக ரூ.30 லட்சம் செலவில் கபடி மைதானம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடத்தும் வகையில் மைதானம் வடிவமைக்கப்பட்டு மின்னொளி வசதி செய்யப்படுகிறது. அங்கு 1,000 பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்கும் வகையில் பார்வையாளர் மாடமும் (கேலரி) கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு மைதானம் தயார் நிலைக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு வசதிகள் உள்ளதைபோல் தற்போது புதிதாக கபடி மைதானம் அமைக்கப்பட்டு வருவதன் மூலம் கபடி விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story