20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை முன்னாள் அமைச்சர் பேட்டி
20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேட்டி.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தர்மபுரி சட்டசபை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாக்குச்சாவடி முகவர் குழு அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட இணை செயலாளர் சாந்தரூபி, ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, கணேசன், பூங்காவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வம், சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மாநில வக்கீல் பிரிவு இணை செயலாளர் அசோக்குமார், மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் பாலு ஆகியோர் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து விளக்கி பேசினர்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பணிக்குழு அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை இடைத்தேர்தலை நடத்தலாம் அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இடைத்தேர்தலை நடத்தலாம். தற்போது உள்ள தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செயல்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு போதிய நிவாரண உதவி அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.

Related Tags :
Next Story