கஜா புயல் பாதித்த மாவட்டங்களில்: நிவாரண பணிகளை குறை கூறுபவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


கஜா புயல் பாதித்த மாவட்டங்களில்: நிவாரண பணிகளை குறை கூறுபவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2018 3:30 AM IST (Updated: 3 Dec 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளை குறை கூறுபவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள்’ என்று கோவையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை,

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியாற்றும் 12,524 ஊராட்சி செயலாளர்கள், பதிவுறு எழுத்தர் நிலையிலான சம்பள உயர்வு அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான நன்றி அறிவிப்பு மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில ஒருங் கிணைப்பாளர் எம்.மாரப்பன் வரவேற்றார். மாநாட்டில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசிய தாவது:-

தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராமப் பகுதிகளில் ரூ.5 ஆயிரத்து 230 கோடி மதிப்பீட்டில் 3 லட்சத்து 72 ஆயிரம் குடிநீர் திட்டப் பணிகள், ரூ.803 கோடி மதிப்பீட்டில் 20 லட்சத்து 87 ஆயிரம் தெருவிளக்குகள் உள்பட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கிராம பகுதிகளில் வாழும் மக்களின் நல்வாழ்விற்காக, பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி, சிறப்பாக செயல்படுத்தி யமைக்காக, அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளை பெற்று, தமி ழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. அந்த ஊராட்சிகளில் பணி புரியும் ஊராட்சி செயலாளர் களின் முக்கிய பணி, கிராம ஊராட்சிகளில் வரி வசூல் செய்தல், ஊராட்சியை நிர்வகித்தல் மற்றும் ஊராட்சி யில் அரசு திட்டங்களை திறம்பட செயல் படுத்துதல் ஆகும். கிராம ஊராட்சி பணியாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கு தல், சிறப்புபடிகள் வழங்குதல் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ஊராட்சி செயலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனு அளித்தனர். அந்த மனுவை பரிசீலித்து அரசு, உங்களுக்கு உறுதி அளித்தபடி, பதிவுறு எழுத்தர் நிலையில், ஊராட்சி செயலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட காலமுறை ஊதியம், அதாவது நீங்கள் தற்போது பெறும் ரூ.7,700-24,200 என்ற ஊதிய விகிதத்தை, ரூ.15,900-50,400 என்று உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த அரசு உங்களின் நல்வாழ்விற்காக, என்றென்றும் துணை நிற்கும் என்பதை, உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி, தமிழக மக்களுக் கும், தமிழக அரசுக்கும் என்றும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலின் போது ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் களின் பணிகள் பாராட்டுக் குரியது. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் நிவாரண பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டதால் அங்கு இயல்பு நிலைமை திரும்பிக் கொண்டி ருக்கிறது. அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி னார்கள். இப்போது அங்குள்ள மக்கள் எங்களிடம் அன்பாக பழகுகிறார்கள்.

ஆனால் சில எதிர்க்கட்சிகள் நிவாரண பணிகள் குறித்து குறை கூறுகிறார்கள். நிவாரண பணிகளை சிறப்பாக செய்த எங்களை குறை கூறுபவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள். அங்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளினால் அதிக அளவு நிதியை தமிழக அரசு ஒதுக்கி நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசி னார்.

மாநாட்டில், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, இயக்குனர் கே.பாஸ்கரன், மாவட்ட கலெக்டர் ஹரிகரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், சூலூர் கனகராஜ், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநில தலைவர் சவுந்தரராஜன், மாநில ஒங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், சார்லஸ், குமரேசன், குணசேகரன் உள்பட ஏராள மானவர்கள் கலந்து கொண்ட னர். 

Next Story