முத்துப்பேட்டையில் பயங்கரம்: லாட்ஜ் உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு 2 பேர் கைது

முத்துப்பேட்டையில், லாட்ஜ் உரிமையாளரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை டி.டி.பி. சாலையில் வசித்து வருபவர் அகம்மது ஜலாலுதீன்(வயது 60). இவர் புதிய பஸ் நிலையத்தில் சொந்தமாக லாட்ஜ் வைத்து நடத்தி வருகிறார். அந்த லாட்ஜில் முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த குமரய்யா மகன் வசந்தகுமார்(23), கோவிலூரை சேர்ந்த ஆதிமுத்து மகன் வீரசேகர்(23), தெற்கு காட்டை சேர்ந்த ராஜசேகர் மகன் பிரசாந்த்(22) ஆகியோர் அறை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் வாடகை பிரச்சினை தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர் அகம்மது ஜலாலுதீனுக்கும், அறையில் தங்கியிருந்த வசந்தகுமார், வீரசேகர், பிரசாந்த் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் லாட்ஜை பூட்டி விட்டு அகம்மது ஜலாலுதீன் வீட்டிற்கு சென்றார். அப்போது வசந்தகுமார், வீரசேகர், பிரசாந்த் ஆகிய 3 பேரும் அகம்மது ஜலாலுதீன் வீட்டிற்குள் புகுந்து அவரை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.
வலி தாங்க முடியாமல் அகம்மது ஜலாலுதீன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த அகம்மது ஜலாலுதினை அப்பகுதியினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அகம்மது ஜலாலுதினை அரிவாளால் வெட்டிய வசந்தகுமார், வீரசேகர் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாகி விட்ட பிரசாந்தை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் லாட்ஜ் உரிமையாளர் வெட்டப்பட்ட பயங்கர சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பதற்றம் ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமானோர் கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story