கோழிப்பண்ணையில் வேலை செய்த வடமாநில காதல்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
நெகமம் அருகே கோழிப்பண்ணையில் வடமாநில காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
நெகமம்,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மிதிங்கநர்சரி (வயது 19), ரொமளாபிரமா (18). இருவரும், நெகமத்தை அடுத்துள்ள காட்டம்பட்டியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் தங்கி இருந்து வேலைபார்த்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து தங்களது பெற்றோருக்கு தெரியப்படுத்தினர்.
இதற்கு அவர்களதுபெற்றோர், அசாமிற்கு வாருங்கள். சொந்த ஊரில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் அங்கு சென்றால் தங்களது காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றுகருதிய அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இருந்த போதிலும் பெற்றோர் இங்கு வந்து திருமணத்தை தடுத்துவிடக்கூடும் என்று நினைத்து கவலையுடன் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊருக்கு செல்லாமல் இருவரும் இங்கேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் முடித்தால் பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று இருவரும் குழப்பத்துடன் இருந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் கோழிப்ண்ணையில் தனித்தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
Related Tags :
Next Story