ராயபுரத்தில் கள்ளச்சாவி போட்டு கார் திருடிய 3 பேர் கைது
ராயபுரத்தில் கள்ளச்சாவி போட்டு காரை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அலிமுத்து. சொந்த கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகின்றார். இவர் கடந்த மாதம் 25-ந் தேதி இரவு மேற்கு மாதா கோவில் தெருவில் வழக்கம்போல் காரை விட்டு விட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கார் மாயமாகி இருந்தது. உடனடியாக கார் மாயமானது தொடர்பாக ராயபுரம் போலீசில் அலிமுத்து புகார் செய்தார்.
அதன்பேரில் ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து காரை திருடி சென்றவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் 2 பேர் கள்ளச்சாவி போட்டு காரை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வேறு நபர்கள் யாரிடமாவது காரை ஓட்ட கொடுத்தாரா? என்பது குறித்தும் இதற்கு முன் அந்த காரை ஓட்டிய டிரைவர்கள் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கார் காணமல் போனதற்கு 4 நாட்களுக்கு முன்பாக பாரிமுனை பகுதியை சேர்ந்த சித்திக் (வயது 29) என்பவருக்கு அலிமுத்து காரை வாடகைக்கு ஓட்டி சென்றதும், அப்போது சித்திக்குடன் சேர்ந்து 3 நபர்கள் காரில் சென்றதும், அவர்கள் பாரிமுனை பகுதியில் இருந்த லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.உடனடியாக பாரிமுனை பகுதியில் இருந்த சித்திக்கை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் காரை திருடியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் கார் கடத்தலில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த பத்மாவதி சண்முகம் (28), கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த அனிஷ் (28) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து காரை மீட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேரும் திட்டமிட்டு காரை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
சித்திக், அலிமுத்துவிடம் 3 நாட்களுக்கு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். 2-வது நாள் லாட்ஜில் இருந்த போது அலிமுத்துவிடம் காரில் தனது ஆதார் கார்டு இருப்பதாக கூறிய அனிஷ் கார் சாவியை வாங்கி கொண்டு சென்று 3 மணி நேரத்திற்கு பிறகு வந்துள்ளார். அதற்குள் காருக்கான கள்ள சாவியை அவர் தயார் செய்துவிட்டார். பின்னர் திட்டமிட்டபடி கடந்த 25-ந் தேதி இரவு அலிமுத்து நிறுத்தி வைத்திருந்த காரை கள்ளச்சாவியை போட்டு திருடி சென்றனர்.
அதனை தொடர்ந்து சித்திக் சென்னையிலேயே இருக்க, அனிசும், பத்மாவதி சண்முகமும் மதுரை சென்று அங்கிருந்து அனிஷ் மட்டும் காரை எடுத்து கொண்டு மார்த்தாண்டம் சென்றுவிட்டார்.
பின்னர் காரை கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு சென்று காரின் நம்பரை மாற்றினார். அந்த காரை விற்க முயற்சி செய்துகொண்டிருக்கையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று காரை மீட்டு சென்னைக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
கார் திருடியவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story