போலி பாஸ்போர்ட் வாயிலாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிய மும்பை பெண் கைது
போலி பாஸ்போர்ட் வாயிலாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்து கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட மும்பை பெண் கைது செய்யப்பட்டார். அவரை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை,
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அழைத்துச் சென்று மோசடி கும்பல் ஒன்று கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டுவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கில் சென்னை நங்க நல்லூரைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் தமிழ்மாறன், சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜெயசிங், ஸ்டீபன், மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீஸ்காரர் கிரிதரபிரசாத் ஆகியோர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மஞ்சு தத்தா (வயது 57) என்ற பெண் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்யும்படி மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதன் பேரில் துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார், சர்வதேச போலீஸ் உதவியுடன் மஞ்சு தத்தாவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மஞ்சு தத்தா லண்டனிலிருந்து மும்பை வந்து தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னையில் இருந்து மும்பை சென்ற தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மஞ்சு தத்தாவை கைது செய்தனர்.
நேற்று அவர் விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு அவர் நேற்று இரவு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சு தத்தா பெரும்பாலும் மும்பையில் வசிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story