விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி சிக்கியது


விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி சிக்கியது
x
தினத்தந்தி 4 Dec 2018 3:45 AM IST (Updated: 4 Dec 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கோட்டை, 

நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு செல்லும் பாசஞ்சர் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக செங்கோட்டை ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் செங்கோட்டை, பகவதிபுரம் மற்றும் ஆரியங்காவு ரெயில் நிலையங்களில் அந்த ரெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ரெயிலில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் சின்ன சின்ன பேரல்கள், வாளி மற்றும் கோணிப்பைகளில் சுமார் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

போலீசாரை பார்த்ததும், அரிசி கடத்தி வந்தவர்கள் பயணிகள் போல் இருந்து தப்பி விட்டனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து கொல்லத்திற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story