கிலோ 20 காசுக்கு விற்பதால் விரக்தி: 2 ஏக்கர் கத்தரி தோட்டத்தை அழித்த விவசாயி
கிலோவுக்கு 20 பைசா மட்டுமே கிடைத்ததால் விரக்தி அடைந்த விவசாயி, 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட கத்தரி தோட்டத்தை அழித்தார்.
மும்பை,
விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்திக்குள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் கூட நாசிக் மாவட்டம் நிப்பாட் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் விளைவித்த வெங்காயத்திற்கு குறைந்த விலையே கிடைத்ததால், அந்த பணத்தை பிரதமருக்கு அனுப்பிவைத்து தனது கவலையை வெளிப்படுத்தினார்
இந்த நிலையில் அகமத்நகர் மாவட்டம் ரஹதா தாலுகாவை சேர்ந்த சகுரி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர பவகே என்ற விவசாயி தான் விளைவித்த கத்தரிக்காய் கிலோ 20 பைசாவுக்கு மட்டுமே விற்பனையாவதை அறிந்து விரக்தியில் தனது மொத்த தோட்டத்தையும் அழித்துள்ளார்.
இது குறித்து ராஜேந்திர பவகே கூறியதாவது:- நான் எனது விவசாய நிலத்தில் கத்தரிக்காய் பயிர்செய்தேன். அதற்கு சொட்டு நீர் பாசனம் வழங்க குழாய்களை அமைத்தேன்.
மேலும் விளைச்சலை அதிகப்படுத்த உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கி பயன்படுத்தினேன். இப்படி பயிரை விளைவிக்க ரூ.2 லட்சம் முதலீடு செய்தும், வெறும் 65 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.
பின்னர் மீண்டும் விற்பனை செய்வதற்காக நாசிக் மற்றும் சூரத் பகுதிகளில் உள்ள மொத்த வியாபார சந்தையில் அணுகியபோது விலை வீழ்ச்சி காரணமாக கிலோவுக்கு வெறும் 20 பைசா மட்டுமே கிடைக்கும் என்பதை அறிந்து விரக்தி அடைந்தேன்.
இதனால் மேலும் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காய் பயிரை அழித்துவிட்டேன்.
நான் மூன்று மாடுகளை வளர்த்து வருகிறேன். அதற்கு தீவனம் வாங்க பணம் தேவைப்படுகிறது. இதற்கும் நான் கத்தரிக்காய் பயிரை தான் நம்பியிருந்தேன். இப்போது கால்நடைகளை பாதுகாக்க என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை.
உரம், பூச்சிக்கொல்லி வாங்கிய ரூ.35 ஆயிரம் கடனை அடைக்க வழி தெரியாமல் தவித்துவருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story