தண்டவாளம் அருகே நின்று கொண்டு ரெயில் பயணிகளை கம்பால் தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது


தண்டவாளம் அருகே நின்று கொண்டு ரெயில் பயணிகளை கம்பால் தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2018 5:16 AM IST (Updated: 4 Dec 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாளம்அருகே நின்று கொண்டு, ரெயில் பயணிகளை கம்பால் தாக்கி செல்போன்கள் பறித்து வந்த 2பேரைரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் பாந்திரா- சாந்தாகுருஸ் இடையே சம்பவத்தன்று இரவு சென்று கொண்டிருந்த ஒரு மின்சார ரெயிலில் நவ்நாத் பாண்டுரங்(வயது25) என்பவர் வாசல் ஓரம் நின்று பயணம் செய்தார். அப்போது தண்டவாளத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் நவ்நாத் பாண்டுரங்கை தான் வைத்திருந்த கம்பால் தாக்கினார். இதில், அவர் கையில் இருந்த செல்போன் கீழே விழுந்தது. அந்த செல்போனை எடுத்து கொண்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி நவ்நாத் பாண்டுரங் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். இந்தநிலையில், அவரிடம் செல்போன் பறித்தவர் வில்லேபார்லே ரெயில் நிலையம் அருகே போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியை சேர்ந்த அஸ்வக் சலீம் ஷேக் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த நவ்நாத் பாண்டுரங்கின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சி.எஸ்.எம்.டி.-அந்தேரி புறநகர் ரெயிலில் தர்சன் பிரதாப்(26) என்பவர் ரெயிலின் வாசல் ஓரம் நின்று செல்போனில் பேசியபடி பயணம் செய்தார். அப்போது தண்டவாளம் அருகே நின்ற ஒருவர் அவரை கம்பால் தாக்கி செல்போனை பறித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில், அவரை தாக்கி செல்போனை பறித்தது பாந்திரா கிழக்கில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்த சத்யம் சிங் (20) என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story