அம்பேத்கர் நினைவு தினம் சைத்ய பூமியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு


அம்பேத்கர் நினைவு தினம் சைத்ய பூமியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 4 Dec 2018 5:20 AM IST (Updated: 4 Dec 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி தாதர் சைத்ய பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மும்பை,

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவுதினம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அம்பேத்கரின் நினைவிடம் அமைந்துள்ள தாதர் சிவாஜிபார்க் சைத்ய பூமியில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்துவார்கள்.

இதற்காக இப்போதே மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில், பஸ்கள் மூலமாக சைத்ய பூமியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு இருக்கிறார்கள்.

மராட்டியத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து உள்ளனர். மும்பை மாநகராட்சி சார்பில் சிவாஜிபார்க் மைதானத்தில் போடப்பட்டு உள்ள பிரமாண்ட பந்தல்களில் அவர்கள் தங்கி இருக்கின்றனர்.

தொடர்ந்து சைத்ய பூமிக்கு மக்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். சைத்ய பூமிக்கு வருவோரின் வசதிக்காக தற்காலிக கழிவறைகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் வகையில் சைத்ய பூமி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story