உரிய நேரத்தில் இயக்க வலியுறுத்தி அரசு பஸ்சை மாணவர்கள், பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
கோட்டூர் அருகே உரிய நேரத்தில் இயக்க வலியுறுத்தி அரசு பஸ்சை மாணவர்கள், பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இருந்து களப்பால், அக்கரைக்கோட்டகம் வழியாக கறம்பக் குடி, மேலசாலை வரை ஒரு அரசு பஸ்சும், திருத்துறைப்பூண்டியில் இருந்து களப்பால், அக்கரைக்கோட்டகம் வழியாக வேதபுரம் வரை ஒரு அரசு பஸ்சும் காலை நேரத்தில் இயக்கப்படுகின்றன. கஜா புயலுக்கு பிறகு இதுநாள் வரை அந்த 2 அரசு பஸ்சுகளும் இயக்கப்படவில்லை.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் தலைமையில், உரிய நேரத்தில் பஸ்களை இயக்க வலியுறுத்தி கோட்டூர் அருகே உள்ள களப்பால் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை 10 மணிக்கு அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த களப்பால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து திருத்துறைப்பூண்டி அரசு போக்குத்து கிளை மேலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கிளை மேலாளர் தொலைபேசி மூலம் பேசி நாளை முதல் (அதாவது இன்று) காலை முதல் 2 பஸ்களையும் அட்டவணைப்படி இயக்குவதாக கூறினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வேதபுரம்-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story