பெற்றோர் கண்டித்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேல்மணம்பேட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சர்வேஸ்வரன் (வயது 18). ஐ.டிஐ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சர்வேஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுற்றி திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அவரது பெற்றோர் ஏன் இவ்வாறு உன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாய்? என கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த சர்வேஸ்வரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சோமசுந்தரம் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்வேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story