விசைப்படகுகளை சூறையாடிய கஜா புயல்: 19 நாட்களாக துறைமுகங்களில் மரக்கட்டைகளாக கிடக்கும் அவலம்
சேதுபாவாசத்திரம், பேராவூரணியில் விசைப்படகுகளை கஜா புயல் சூறையாடியது. இதனால் 19 நாட்களாக துறைமுகங்களில் மரக்கட்டைகளாக கிடக்கும் அவல நிலை உள்ளது.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 246 விசைப்படகுகள் இருந்தன. விசைப்படகுகளுக்கு என்று சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டினம் பகுதிகளில் மட்டுமே மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.தற்போது மல்லிப்பட்டினத்தில் ரூ.66 கோடி செலவில் துறைமுகம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தன.
மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். மற்ற நாட்களில் துறைமுகங்களில் தங்கள் விசைப்படகுகளை மீனவர்கள் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவில் கரையை கடந்த கஜா புயல், சேதுபாவாசத்திரம், பேராவூரணி துறைமுகங்களில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை சூறையாடியது. இதனால் 246 படகுகளும் சேதமடைந்து எங்கு பார்த்தாலும் மரக் கட்டைகளாக கிடக்கும் அவல நிலையில் உள்ளது. கடந்த 19 நாட்களாக சேதமடைந்த படகுகளின் பாகங்கள் அங்கே கிடக்கின்றன.
புதிய படகு தயார் செய்ய ஆறு மாதமாகும் என்பதால் அதுவரை மீன்பிடி தொழிலுக்கு எப்படி செல்வது என மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story