மாவட்ட செய்திகள்

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்டி.ஐ.ஜி. வனிதா உத்தரவு + "||" + Vellore and Thiruvannamalai districts 27 Police Inspectors Workplace Transfer DIG Vanitha directive

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்டி.ஐ.ஜி. வனிதா உத்தரவு

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்டி.ஐ.ஜி. வனிதா உத்தரவு
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளார்கள்.
வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த பிரபாவதி கலசபாக்கத்திற்கும், சுபா பெரணமல்லூருக்கும், ராஜலட்சுமி செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், வேலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மைதிலி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோன்று வசந்தி அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், சோனியா திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், அபர்ணா வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கும் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளனர்.


வேலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த மலர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்த நிர்மலா கலவைக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்த பி.அமுதா போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணகிரியில் பணிபுரிந்த ஆர்.அமுதா திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த பி.அமுதா அங்கிருந்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜனார்த்தனன் செய்யாறுக்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சியாமளா, திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கும், அங்கு பணிபுரிந்த ரேகாமதி வேலூருக்கும் மாற்றப்பட்டுள்ளார்கள். கலவை கோவிந்தசாமி பள்ளிகொண்டாவுக்கும், திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்கள்.

போளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராணி வேட்டவலத்திற்கும், அங்கு பணிபுரிந்த மனோன்மணி லத்தேரிக்கும், சென்னை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த இலக்குவன் பொன்னைக்கும், அங்கு பணிபுரிந்த பார்த்தசாரதி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், ஆற்காடு டவுன் ஆனந்தன் ராணிப்பேட்டைக்கும், சத்துவாச்சாரி புகழேந்தி ஆற்காடு டவுனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அண்ணாதுரை சத்துவாச்சாரிக்கும், ஆரணி தாலுகா சாலமோன்ராஜ் கண்ணமங்கலத்திற்கும், குடியாத்தம் மதுவிலக்குபிரிவு பாரதி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், கலசபாக்கம் ராஜகோபால் குடியாத்தம் மதுவிலக்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ரேஷன் கடையை அகற்ற எதிர்ப்பு - பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ரேஷன் கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி; மதுரையை சேர்ந்த 4 பேர் கைது
வேலூர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடிவரை மோசடி செய்த மதுரையை சேர்ந்த 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.
3. தேர்தல் ரத்து; வேலூரில் நாளை 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து செய்யப்படுகிறது
வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை 4 இடங்களில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.
4. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5. ‘எத்தனை எட்டப்பர்கள் இருந்தாலும் நாம் ஜெயிப்பது நிச்சயம்’ வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் பேச்சு
எத்தனை எட்டப்பர்கள் இருந்தாலும் நாம் ஜெயிப்பது நிச்சயம் என்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்ஆனந்த் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...