பாளையங்கோட்டையில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் சிக்கினர்


பாளையங்கோட்டையில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:00 AM IST (Updated: 5 Dec 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் சிக்கினர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் சிக்கினர்.

நகை அபேஸ்

பாளையங்கோட்டை புதுப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த மணி என்பவருடைய மனைவி நாச்சியார் (வயது 65). சம்பவத்தன்று இவர் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றிருந்தார். அப்போது போலீஸ் போல் நடித்து 2 பேர் நாச்சியாரை ஏமாற்றி அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை அபேஸ் செய்து சென்று விட்டனர்.

இதுதொடர்பாக நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (குற்றம்-போக்குவரத்து) பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது நாச்சியாரிடம் நகையை பறித்து சென்ற 2 பேர் உருவம் பதிவாகி இருந்தது.

2 பேர் சிக்கினர்

அவர்களது உருவப்படங்களை சேகரித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது 2 பேரும் ஈரோட்டில் ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கி இருப்பது தெரியவந்தது. அதாவது நாச்சியாரிடம் நகையை பறித்து விட்டு ஈரோட்டுக்கு சென்று கைவரிசை காட்டி உள்ளனர். அங்கு தப்பி ஓட முயன்றபோது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இதுபற்றிய தகவலை ஈரோடு போலீசார் நெல்லை மாநகர போலீசாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த தனிப்படையினர் கொள்ளையர்களை பிடித்து வருவதற்காக ஈரோட்டுக்கு சென்று உள்ளனர்.

Next Story