சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது


சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 5 Dec 2018 3:45 AM IST (Updated: 5 Dec 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் இன்று(புதன்கிழமை) நடக்கிறது.

பெங்களூரு, 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் இன்று(புதன்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், குமாரசாமி முதல்-மந்திரியாக பணியாற்றி வருகிறார். இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்க பா.ஜனதா முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக அரசின் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் இன்று(புதன்கிழமை) நடக்கிறது.

ஆட்சியை காப்பாற்றுவது...

இதில் முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டேனிஷ் அலி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இதில் குதிரை பேரத்தில் சிக்காமல் கூட்டணி ஆட்சியை காப்பாற்றுவது, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது, வாரிய தலைவர்களை நியமனம் செய்வது, எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, ஹாசன் உள்பட சில மாவட்டங்களில் காங்கிரசார் பகிரங்கமாக கூறி வரும் அதிருப்தியை சரிசெய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

முக்கியத்துவம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story