மண்டியாவில் வாடகை வீட்ைட காலி செய்தது ஏன்? நடிகை ரம்யா விளக்கம்


மண்டியாவில் வாடகை வீட்ைட காலி செய்தது ஏன்? நடிகை ரம்யா விளக்கம்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் வாடகை வீட்டை காலி செய்தது ஏன்? என்பதற்கு நடிகை ரம்யா விளக்கம் அளித்து உள்ளார்.

பெங்களூரு, 

மண்டியாவில் வாடகை வீட்டை காலி செய்தது ஏன்? என்பதற்கு நடிகை ரம்யா விளக்கம் அளித்து உள்ளார்.

கடும் எதிர்ப்பு கிளம்பியது

மண்டியா நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா, மறைந்த நடிகர் அம்பரீசின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. இதனால் அவருக்கு மண்டியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது உருவ படத்தை அச்சிட்டு அஞ்சலி சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரம்யா, மண்டியாவில் வசித்த வாடகை வீட்டை காலி செய்தார். இதனால் அவர் மண்டியா அரசியலில் இருந்தும் விலகியதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் இதற்கு ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

வீட்ைட காலி செய்யுமாறு...

நான் இரவோடு இரவாக வீட்டை காலி செய்யவில்ைல. மண்டியாவில் நான் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டின் உரிமையாளர் என்னிடம் தொலைபேசியில் பேசி, தான் அந்த வீட்டுக்கு வர வேண்டி இருப்பதால், வீட்டை காலி செய்யுமாறு கூறினார். அதனால் ஒரு பொறுப்புள்ள வாடகைகாரராக நான் அந்த வீட்டை காலி செய்தேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story