பெங்களூருவில், அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முற்றுகை பணி நியமன பட்டியலை வெளியிட கோரி ஆர்ப்பாட்டம்


பெங்களூருவில், அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முற்றுகை பணி நியமன பட்டியலை வெளியிட கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

பணி நியமன பட்டியலை வெளியிட கோரி அரசு போட்டித்தேர்வு எழுதியவர்கள், அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெங்களூரு, 

பணி நியமன பட்டியலை வெளியிட கோரி அரசு போட்டித்தேர்வு எழுதியவர்கள், அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசு பணியாளர் ேதர்வாணையம் சார்பில் கலால்துறை, தட்டச்சு பணியாளர்கள் நியமன பணிகள் நடைபெற்றன. இதற்கான போட்டித்தேர்வுகள் மற்றும் பணி நியமனம் செய்வதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இந்த பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணி நியமன பட்டியலை கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடவில்லை.

இதையடுத்து அந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியவர்கள், நேற்று பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் ஆவேசமாக தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணி நியமன பட்டியலை உடனே வெளியிட வேண்டும், பணி ஆணைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தொழில்நுட்ப கோளாறு

பா.ஜனதாவை சேர்ந்த சுரேஷ்குமார் எம்.எல்.ஏ. நேரில் வந்து ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கலால்துறை மற்றும் தட்டச்சு துறை பணியாளர்கள் நியமனத்திற்கு தேர்வு நடைபெற்று முடிந்துவிட்டது. அதற்கான பணி நியமன பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. இதுகுறித்து பணியாளர் தேர்வாணைய தலைவர் சாம்பட்டை நேரில் சந்தித்து பேசினேன். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், நியமன பட்டியலை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு்ள்ளதாக தெரிவித்தார். மேலும் வருகிற 25-ந் தேதிக்குள் நியமன பட்டியலை வெளியிட வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும், இந்த விவகாரம் குறித்து சட்டசபை கூட்டத்தொடரில் பேசுவேன்’’ என்றும் கூறினார்.

Next Story