புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி; நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆடிப்பாடி நிதி திரட்டினர்


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி; நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆடிப்பாடி நிதி திரட்டினர்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:15 AM IST (Updated: 5 Dec 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதில் நாட்டுபுறக் கலைஞர்கள் ஆடிப்பாடி நிதி திரட்டினர்.

காரைக்குடி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் காரைக்குடியில் இருந்து நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த 10 நாட்களாக ரூ.12 லட்சம் மதிப்பிலான தண்ணீர் பாட்டில்கள், போர்வை, தார்பாய்கள், அரிசி, பருப்பு வகைகள், சேலை, வேட்டி, கோதுமை உள்ளிட்ட நிவராண பொருட்களை பொதுமக்களிடம் இருந்து திரட்டி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் நாடியம் கிராம பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நமது பாதுகாப்பு உரிமை இயக்க தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள் ராமு, விக்னேஷ், ஆஷிக், சரவணன், செல்வக்குமார், சுரேஷ், பழனிக்குமார், சூர்யாபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிவகங்கையில் உள்ள மன்னர் கல்வி நிறுவனங்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்துக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக நிவாரணம் வழங்கும் வகையில் ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளர்கள், மாணவ–மாணவிகள் ஆகியோரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

காரைக்குடியில் நாட்டுப்புற கலைஞர்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக காரைக்குடியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பெரியார் சிலை, 5 விளக்கு ஆகிய பகுதிகளில் கரகாட்டம், நையாண்டி, மேளம், நாட்டுப்புற பாடல்கள் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி ஆடிப்பாடி நிதி திரட்டினர். நாட்டுப்புற கலைஞர் கானா இளையராஜா தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story