அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி 12 சிறப்பு மின்சார ரெயில் சேவைகள் நாளை அதிகாலை இயக்கப்படுகிறது


அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி 12 சிறப்பு மின்சார ரெயில் சேவைகள் நாளை அதிகாலை இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 5 Dec 2018 5:00 AM IST (Updated: 5 Dec 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி நாளை அதிகாலை மத்திய ரெயில்வே 12 சிறப்பு மின்சார ரெயில் சேவைகளை இயக்குகிறது.

மும்பை,

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி நாளை அதிகாலை மத்திய ரெயில்வே 12 சிறப்பு மின்சார ரெயில் சேவைகளை இயக்குகிறது.

சிறப்பு ரெயில்

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தாதர் சைத்ய பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் மக்களின் வசதிக்காக மத்திய ரெயில்வே 12 சிறப்பு மின்சார ரெயில் சேவைகளை இயக்குகிறது.

இதன்படி மெயின் வழித்தடத்தில் நாளை தாதரில் இருந்து அதிகாலை 1.15 மணிக்கு தானேவுக்கும், 2.25 மணிக்கு கல்யாணுக்கும், 3 மணிக்கு குர்லாவுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில், தாதருக்கு குர்லாவில் இருந்து அதிகாலை 12.45 மணிக்கும், கல்யாணில் இருந்து 1 மணிக்கும், தானேயில் இருந்து 2.10 மணிக்கும் புறப்பட்டு வரும்.

துறைமுக வழித்தடத்தில்...

துறைமுக வழித்தடத்தில் குர்லாவில் இருந்து மான்கூர்டுக்கு அதிகாலை 2.30 மணிக்கும், பன்வெலுக்கு 3 மணிக்கும், வாஷிக்கு 4 மணிக்கும் சிறப்பு ரெயில் புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில், குர்லாவுக்கு வாஷியில் இருந்து அதிகாலை 1.30 மணிக்கும், பன்வெலில் இருந்து 1.40 மணிக்கும், மான்கூர்டில் இருந்து 3.10 மணிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த தகவல் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல பெஸ்ட் குழுமம் சார்பில் சைத்யபூமிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Next Story