மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Dec 2018 4:30 AM IST (Updated: 5 Dec 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோா்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோா்ட்டு தீர்ப்பு கூறியது.

மனநலம் பாதித்த பெண் கற்பழிப்பு

மும்பை கோரேகாவ் மேற்கு, பகத் சிங் நகரை சேர்ந்தவர் அனில் அன்யா. இவர் 2007-ம் ஆண்டு சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த 18 வயது மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்தார். இதில் மனநலம் பாதித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் அனில் அன்யாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில், அனில் அன்யா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த கோர்ட்டு, அனில் அன்யாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Next Story