மாவட்ட செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தஞ்சையில் 18–ந்தேதி கண்டன பேரணி + "||" + The protest rally on the 18th of May in Thanjavur against the central government allowing the construction of the dam in Meghdadavu

மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தஞ்சையில் 18–ந்தேதி கண்டன பேரணி

மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தஞ்சையில் 18–ந்தேதி கண்டன பேரணி
மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தஞ்சையில் வருகிற 18–ந்தேதி கண்டனபேரணி நடத்தப்போவதாக காவிரி உரிமை மீட்புக்குழு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் மணிமொழியன், விடுதலை தமிழ்ப்புலிகள் தலைவர் குடந்தைஅரசன், டாக்டர் பாரதிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இருந்து வரும் உபரிநீர் கூட இனி மேட்டூர் அணைக்கு வராது. காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித்தீர்ப்பிற்கும், சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பிற்கும் நேர் எதிராக, கர்நாடக அரசு புதிய நீர்த்தேக்கம் கட்டி தமிழகத்திற்கு வரும் மிச்சநீரையும் தடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது. இந்த சட்ட விரோத செயலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.


அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர். தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

ஆனால் மத்திய அரசு இதை தூக்கி எறிந்து விட்டு, தமிழக மக்களை இனபாகுபாட்டோடு வஞ்சித்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பா.ஜ.க. அரசாக இருந்தாலும் இந்த இனபாடுபாடு கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசை கண்டித்து வருகிற 18–ந்தேதி தஞ்சையில் கண்டன பேரணி நடத்த உள்ளது. அதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.


நாளை (இன்று) கூட உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை வழக்கமான நடைமுறைப்படி ஒருமனதான தீர்மானத்தைப் போட்டு ஒதுங்கிக் கொள்ளாமல், மக்களைத் திரட்டி ஜனநாயக வழியில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து கண்டன போராட்டங்கள் நடத்துவதற்கு வழிவகுக்க வேண்டும். காவிரிக் காப்புநாள் என அறிவித்து அன்று குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை கட்சி வேறுபாடில்லாமல் ஒருங்கிணைந்து கண்டன பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்த தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதவி விலக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னத்துரை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், தமிழ்தேசிய பாதுகாப்பு கழக தலைவர் வக்கீல் கார்த்திகேயன், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட பொறுப்பாளர் அகமது கபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ–மாணவிகள் பங்கேற்பு
நாகர்கோவிலில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
2. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்று போலீஸ் துணை கமிஷனர் வழங்கினார்
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா மரக்கன்று வழங்கி பாராட்டினார்.
3. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 7 பேர் மீது வழக்கு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், விவசாயிகள் பிரமாண்ட பேரணி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனுவும் அளித்தனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
5. நாகர்கோவிலில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி மாணவ–மாணவிகள் பங்கேற்பு
நாகர்கோவிலில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவ–மாணவிகள் பங்கேற்றனர்.