தங்கை மீது தாய்க்கு அதிக பாசம்: 7–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


தங்கை மீது தாய்க்கு அதிக பாசம்: 7–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2018 3:15 AM IST (Updated: 6 Dec 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

தங்கை மீதே தாய் அதிக பாசம் செலுத்துவதாக நினைத்து வேதனை அடைந்த 7–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவொற்றியூர்,

சென்னையை அடுத்த மணலி விமலா புரத்தைச் சேர்ந்தவர் ராஜபிரபு. இவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு காருண்ய வைசாலி (வயது 5) என்ற மகள் உள்ளார். இவர்களுக்கு முகேஷ்கோகுல் (12) என்ற மகனும் இருந்தார். அவர், அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார்.

ராஜபிரபு–சரண்யா இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. சரண்யா தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

தனது தாய் சரண்யா, தங்கை காருண்ய வைசாலி மீது அதிக பாசம் காட்டுவதாகவும், தன் மீது பாசம் காட்டுவது இல்லை என்றும் சக மாணவர்களிடம் முகேஷ்

கோகுல் அடிக்கடி மனவேதனையுடன் தெரிவித்து வந்தார். 

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது மாணவன் முகேஷ் கோகுல், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்துகொண்ட மாணவன் முகேஷ்கோகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர், தாய் பாசம் கிடைக்காததால் ஏக்கத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாரா?, அல்லது பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story