கிருஷ்ணகிரியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


கிருஷ்ணகிரியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 6 Dec 2018 4:30 AM IST (Updated: 6 Dec 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளில் விடுபட்ட வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், ஊனத்தின் தன்மையை பதிவு செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்தி தருதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமமூர்த்தி, குழு உறுப்பினர்களான மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர் விமல்ராஜ், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், தேர்தல் தாசில்தார் தணிகாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story