மெட்ரோ ரெயில் நிறுவன சலுகை கட்டணத்தில் கால்டாக்சி, ஷேர் ஆட்டோக்களில் 33 ஆயிரம் பேர் பயணம்
மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் நலன் கருதி சலுகை கட்டணத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் உள்ள திருமங்கலம், கோயம்பேடு, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர், பரங்கிமலை, சின்னமலை மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் நலன் கருதி சலுகை கட்டணத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் மற்றும் ஏ.ஜி–டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) ஆகிய ரெயில் நிலையங்களில் கால் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.10–ல் இருந்து ரூ.5–ம், கால் டாக்சி கட்டணம் ரூ.15–ல் இருந்து ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த நவம்பர் மாதம் 33 ஆயிரத்து 866 பயணிகள் இதில் பயணம் செய்து உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story