அரசு வேலை வாங்கி தருவதாக 17 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி தொழில்அதிபர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


அரசு வேலை வாங்கி தருவதாக 17 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி தொழில்அதிபர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Dec 2018 3:00 AM IST (Updated: 6 Dec 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் அரசு வேலை வாங்கி தருவதாக 17 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்த தொழில் அதிபர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் அரசு வேலை வாங்கி தருவதாக 17 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்த தொழில் அதிபர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக...

திருச்செந்தூரை அடுத்த அடைக்கலாபுரம் கீழ தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 54). இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ஏசு ராஜா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி (70). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவர் ஸ்டீபனிடம் தனக்கு தெரிந்த பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர் கிளாஸ்டனிடம் பணத்தை வழங்கினால், மின்வாரியம், கால்நடை பராமரிப்பு துறையில் அரசு வேலை பெற்று தருவார் என்று கூறினார். அதன்படி ஸ்டீபன் தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 17 பேருக்கு அரசு வேலை பெறுவதற்காக மொத்தம் ரூ.57 லட்சத்தை சேகரித்தார். பின்னர் அதனை கிளாஸ்டனின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தினார்.

போலீஸ் வலைவீச்சு

பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக கிளாஸ்டன் யாருக்கும் அரசு வேலை வாங்கி தராமல் தலைமறைவானார். இதுகுறித்து அந்தோணி அளித்த புகாரின்பேரில், நெல்லை மாநகர குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிளாஸ்டனை தேடி வருகின்றனர்.

ஆனால் அவர் இதுவரை அந்த போலீசாரிடம் சிக்கவில்லை. இந்த நிலையில் ஸ்டீபன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கிளாஸ்டன் மற்றும் அந்தோணியை தேடி வருகின்றனர்.

Next Story