தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அம்மா திட்ட முகாம்
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்தந்த தாசில்தார் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
கிராமங்கள்
முகாம் தூத்துக்குடி தாலுகா அய்யனடைப்பிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வசவப்பபுரத்திலும், திருச்செந்தூர் தாலுகா சேர்ந்தமங்கலத்திலும், சாத்தான்குளம் தாலுகா அரசூர் பகுதி-1, கோவில்பட்டி தாலுகா இளையரசனேந்தலிலும், விளாத்திகுளம் தாலுகா சிவஞானபுரத்திலும், எட்டயபுரம் தாலுகா சின்னமலைக்குன்று கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா முறம்பன் கிராமத்திலும், கயத்தார் தாலுகா எஸ்.குமரெட்டையாபுரத்திலும், ஏரல் தாலுகா கச்சனாவிளையிலும் நடக்கிறது.
இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால்் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.
எனவே பொதுமக்கள் இந்த முகாமில் மனுக்களை அளித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story