குளச்சலில் மாயமான வாலிபர் கடலில் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை


குளச்சலில் மாயமான வாலிபர் கடலில் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 6 Dec 2018 3:45 AM IST (Updated: 6 Dec 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் மாயமான வாலிபர் கடலில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளச்சல்,

குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்தவர் மேரிசன் (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிசனின் தாயும், தந்தையும் இறந்து விட்டனர்.

சென்னையில் வேலை பார்த்து வந்த மேரிசன் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன்பிறகு அவர், சென்னைக்கு செல்லாமல், சைமன்காலனியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை உறவினர் வீட்டிலிருந்த மேரிசன் திடீரென மாயமானார். அவரை, உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை குளச்சல் துறைமுக பாலத்தின் கிழக்கே கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த குளச்சல் மரைன் சப் -இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதுபற்றி மேரிசன் உறவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கரை ஒதுங்கிய உடலை பார்த்து, அது மேரிசன் உடல் என அடையாளம் காட்டினர்.

அதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மேரிசன் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story