மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா


மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா
x
தினத்தந்தி 6 Dec 2018 3:30 AM IST (Updated: 6 Dec 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.

நாமக்கல், 

பரமத்தி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டாரவளமைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். விழாவில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களது சகோதரர்களுக்கு உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு விளையாட்டு போட்டிகள், மாறுவேடப்போட்டிகள், நாடகம் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் முரளிதரன், பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் சார்பில் மோகனூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மோகனூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் தொடங்கி வைத்தார். ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் இளங்கோ, அருள்மணி மேற்பார்வையாளர் (பொ) சி.சாந்தி தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, பசீலத்பேகம் போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

புதுச்சத்திரம் வட்டார வளமையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பலூன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், முறுக்கு கடித்தல், பந்து எறிதல் போன்ற போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பிகா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

எருமப்பட்டி வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள் நந்தினி, மணி மேகலை மற்றும் பலர் செய்திருந்தனர்.

Next Story