கடன் தொல்லையால்: டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை


கடன் தொல்லையால்: டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2018 3:15 AM IST (Updated: 6 Dec 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டு சூர்யா நகரை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் வைத்தீஸ்வரன் (வயது 38). இவர் சொந்தமாக கார் வைத்துக்கொண்டு விழுப்புரத்தில் டிராவல்ஸ் நடத்தி வந்தார்.இந்நிலையில் தொழில் விஷயமாக இவர் சிலரிடம் கடன் பெற்றிருந்தார். அந்த கடனை அடைக்க முடியாமல் கடந்த சில மாதங்களாக இவர் சிரமப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு இவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் அவர் தன்னுடைய காரையும் விற்று விட்டார்.மேலும் கடன் தொல்லை காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வைத்தீஸ்வரன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story