சேலம் அருகே ரெயில் மோதி எலக்ட்ரீசியன் பலி


சேலம் அருகே ரெயில் மோதி எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 6 Dec 2018 3:30 AM IST (Updated: 6 Dec 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே ரெயில் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்.

சூரமங்கலம், 

வாழப்பாடி அருகே உள்ள பெரியாகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 49), எலக்ட்ரீசியன். இவர் கடந்த ஒரு வாரமாக சேலம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மணிமாறன் நேற்று காலை தனது ஊரில் இருந்து அயோத்தியாப்பட்டணத்துக்கு பஸ்சில் வந்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து கல்லூரிக்கு செல்வதற்காக ரெயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் வந்த பயணிகள் ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் மோதி இறந்த மணிமாறனுக்கு வளர்மதி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.

Next Story