மேல்மருவத்தூரில்: சக்திமாலை இருமுடி விழா தொடக்கம்


மேல்மருவத்தூரில்: சக்திமாலை இருமுடி விழா தொடக்கம்
x
தினத்தந்தி 6 Dec 2018 3:45 AM IST (Updated: 6 Dec 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடி விழா தொடங்கியது.

மேல்மருவத்தூர், 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2018-19 ஆண்டுக்கான சக்திமாலை இருமுடி விழா நேற்று தொடங்கியது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த இருமுடி விழா ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவையொட்டி முதலில் 9 சிறுமிகளும், 9 தம்பதிகளும் சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களும் அபிஷேகம் செய்தனர்.

விழாவிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகவல் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, சுற்றுப்புறசுகாதாரம், தீயணைப்பு வாகனம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாடைத் தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபாட்டுடன் தொண்டு செய்து வருகிறார்கள். விழா முடியும் வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத்தலைவர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவிரமேஷ் மற்றும் பல்வேறு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். 

Next Story