சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய : எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ வழங்கும் கல்வி நிதி - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நாளை வழங்குகிறார்


சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய : எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ வழங்கும் கல்வி நிதி - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நாளை வழங்குகிறார்
x
தினத்தந்தி 6 Dec 2018 4:30 AM IST (Updated: 6 Dec 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ வழங்கும் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை குரோம்பேட்டையில் உள்ள எஸ்.சி.எஸ். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. பரிசுகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா. பொன்னையா வழங்குகிறார்.

சென்னை, 

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழி காட்டி வரும் ‘தினத்தந்தி’ எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவித்து வந்தது.

மேலும் மாணவர் பரிசு திட்டத்தின்படி மாவட்டந்தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப் பரிசு மற்றும் ‘தினத்தந்தி’யின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்வி நிதி ரூ.34 லட்சம்

கடந்த 2014-2015-ம் கல்வி ஆண்டு முதல் தினத்தந்தி கல்வி நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ-மாணவிகளின் மேல்படிப்புக்கு ‘தினத்தந்தி’ நிதி உதவி அளித்து வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து மாவட்டத்திற்கு 10 மாணவ- மாணவிகள் வீதம் 34 மாவட்டங்களைச் சேர்ந்த 340 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

30 மாணவ-மாணவிகள்

அதன்படி 2017-18-ம் கல்வி ஆண்டில் தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற தகுதி பெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் 30 பேரின் பெயர் விவரம் வருமாறு:-

சென்னை மாவட்டம்

1) மு.மணிமொழி, தூய மேரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்.

2) த.திருசவுமியா, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்.

3)வே.பிரியதர்ஷினி, சிறுவர் தோட்டம் மேல்நிலைப் பள்ளி, மைலாப்பூர்.

4) சி. ஹேமலதா, சி.எஸ்.ஐ. தூய அகஸ்டின் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, தி.நகர்.

5) ம. பத்மபிரியா, முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தண்டை யார்பேட்டை.

6) கு.பவித்ரா, ஸ்ரீஅஹோ பிலமத் ஓரியண்டல் மேல் நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம்.

7) அ.திவ்யதர்ஷினி,ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி, தி.நகர்.

8) க.சுகன்யா, கொ.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி, வண்ணாரப்பேட்டை.

9) சு.துர்கா, சிங்காரம் பிள்ளை பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வில்லி வாக்கம்.

10) உ.கார்த்திகா ப்ரீத்தி, தனலட்சுமி மேல்நிலைப் பள்ளி, ராயபுரம்.

திருவள்ளூர் மாவட்டம்

1) கே.ஆர். தனுஷ்யா, அரசு மேல்நிலைப்பள்ளி, புச்சிரெட்டிப்பள்ளி.

2) ச.அரசு, எம்.ஆர். மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி, மேட்டுக் குப்பம்.

3) ரா.ஸ்ரீநிதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை.

4)ச.ஜெயலட்சுமி, ஆசிரியர் மங்கலங் கிழார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அம்மையார்குப்பம்.

5) கி.புவியா, அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி.

6) ச.காயத்ரி, தளபதி கே.விநாயகம் மெட்ரி குலே சன் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.

7) பா. கார்த்திக், தி.மு.கி. வா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மை யார்குப்பம்.

8) மு. ஈஸ்வரி, அரசு மேல்நிலைப்பள்ளி, புச்சி ரெட்டிப்பள்ளி.

9) மு.டில்லிபாபு, தி.மு. கி. வா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மை யார்குப்பம்.

10) செ.நிர்மல், அரசு மேல்நிலைப்பள்ளி, சுண் ணாம்புக்குளம்.

காஞ்சீபுரம் மாவட்டம்

1) மு.வித்யா, புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, முகலிவாக்கம்.

2) ம.மிதுன்கண்ணா, தேசியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கண்ண மங்கலம்.

3) மு.காயத்ரி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யன்பேட்டை.

4) செ. லினிஷா, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்.

5) ப. தயாநந்தினி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, வாலாஜாபாத்.

6) சு.லோகேஷ்வரி, எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சி புரம்.

7) க.தமிழ்வளவன், அந்திரசன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.

8) ஸ்ரீ.ஜலஸ்ரீ, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

9) க.ஜெயஸ்ரீ, புனித டொமினிக் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பரங்கிமலை.

10. ஆ. சந்தியா, அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேடவாக்கம்.

‘தினத்தந்தி’ கல்வி நிதி வழங்கும் விழா, சென்னை, குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்.சி.எஸ். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறு கிறது.

விழாவுக்கு, காஞ்சீ புரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கி, மாணவ - மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். எஸ்.சி.எஸ். மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளி தாளாளர் கிருஷ் சந்தானம் மற்றும் செயலாளர் லயன் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

‘தினத்தந்தி’ மேலாளர் ஆர். சதீஷ்குமார் வரவேற்று பேசுகிறார்.

Next Story