25-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை பரபரப்பு தகவல்கள்


25-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 6 Dec 2018 4:45 AM IST (Updated: 6 Dec 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

25-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தானே, 

25-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனியார் நிறுவன அதிகாரி

தானே கோல்சேட் பகுதியை சேர்ந்தவர் அபிசேஷ் சர்மா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்து வந்தார். தனது மனைவியுடன் லோதா அமரா என்ற கட்டிடத்தின் 25-வது மாடியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென அபிசேஷ் சர்மா மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். முதல் மாடியில் விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவரின் உடல் முதல் மாடியில் கிடப்பதை கண்டு அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் ஊழியருடன் பழக்கம்

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

அபிசேஷ் சர்மா தன்னுடன் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் திருமணம் செய்து கொண்டதால் வேலையை விட்டு நின்று விட்டார்.

இருப்பினும் அபிசேஷ் சர்மா தன்னுடன் மீண்டும் பழக வேண்டும் என்றும், இல்லையெனில் உனது கணவரை கொலை செய்து விடுவேன் என்றும், அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அந்த பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார்.

போலீஸ் விசாரணை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிசேஷ் சர்மாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இருந்தாலும் இந்த பிரச்சினை அவரது குடும்பத்தில் பெரும் புயலை கிளப்பியது. மனைவி அவரிடம் சண்டையிட்டார். அவரது பெற்றோரும் அவரது மனைவிக்கு ஆதரவாக பேசினார்கள்.

இதனால் மனமுடைந்த அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரின் குடும்பத்தினருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story