நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு


நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 3:15 AM IST (Updated: 7 Dec 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க.-பா.ஜ.க.

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள அவரது உருவ சிலைக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் நாராயணன் உள்ளிட்டவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் உள்ளிட்டவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ்-தே.மு.தி.க.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் மாரிமுத்து உள்ளிட்டவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர செயலாளர் முருகன் உள்ளிட்டவர்களும், தே.மு.தி.க. சார்பில் நகர செயலாளர் பழனிசாமி உள்ளிட்டவர்களும், அ.ம.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ஈசுவர பாண்டியன்உள்ளிட்டவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆதி தமிழர் கட்சி

அம்பேத்கரின் சிலைக்கு ஆதி தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், அமைப்பு செயலாளர் திலீபன், துணை தலைவர் சுரேஷ் உள்ளிட்டவர்களும், புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சார்லஸ் உள்ளிட்டவர்களும், ஆதி தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் செண்பகராஜ், துணை தலைவர் மாரீசுவரி, கொள்கை பரப்பு செயலாளர் கோவிந்தராஜ், நகர தலைவர் செந்தில், செயலாளர் தலித் குமார் உள்ளிட்டவர்களும்,

5-வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன் உள்ளிட்டவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக சிலை பாதுகாப்பு கமிட்டி தலைவர் தாவீது ராஜா தலைமையில், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story