மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு


மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 4:00 AM IST (Updated: 7 Dec 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல், 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் மலர் அஞ்சலி, மவுன ஊர்வலம் போன்றவை நடந்தது. எலச்சிபாளையம் ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் சந்திரசேகர் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சக்திவேல், புரட்சிமுத்து, மாரிமுத்து, மகாலிங்கம், வக்கீல் பரணிதரன், அண்ணாதுரை, வக்கீல் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மோகனூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் மோகனூர் பஸ்நிலைய வளாகத்தில் உள்ள ஒன்றிய, நகர அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியினர், பஸ் நிலையத்திலிருந்து மவுன ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கருமண்ணன் தலைமை தாங்கினார். மோகனூர் நகர செயலாளர் தங்கமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவரணி செயலர் சந்திரமோகன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் புரட்சிபாலு, மோகனூர் துணை செயலாளர் சிவஞானம், பொருளாளர் தாவீது, கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ராமலிங்கம், தங்கவேல், ஊராட்சி செயலாளர்கள் உமாபதி, மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாமகிரிப்பேட்டை அண்ணா கலை அரங்கம் முன்பு ஜெயலலிதா உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. சீராப்பள்ளி பேரூராட்சி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி மற்றும் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, முள்ளுக் குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் மகாலிங்கம், நகர அவைத்தலைவர் ராமசாமி, நகர பொருளாளர் கோபால், சூப்பர் பட்டு சங்க துணைத்தலைவர் கந்தசாமி, நகர வங்கி துணை தலைவர் வெங்கடாசலம், நகர வங்கி இயக்குனர் சீரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சூப்பர் பட்டு சங்க இயக்குனர் செல்வம், நகர மாணவர் அணி செயலாளர் ஜெகன், ஆர்.இ.குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஸ்ரீதர், லோகநாதன், அருணாசலம், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கலைவாணி, மாவட்ட துணைத்தலைவர் ராதாசந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோட்டில் நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், 1-வது வார்டு செயலாளர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story