மாவட்ட செய்திகள்

நெல்லையில் பரிதாபம்ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை + "||" + Tirunelveli The president of the textile shop Suicide

நெல்லையில் பரிதாபம்ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை

நெல்லையில் பரிதாபம்ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை
நெல்லையில் ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை, 

நெல்லையில் ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜவுளிக்கடை அதிபர்

நெல்லை மேலநத்தம் எம்.எல்.எம். நகரை சேர்ந்தவர் நவரத்தினம் (வயது 53). இவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், நெல்லை சந்திப்பு போலீசார் நவரத்தினம் மாயமாகி விட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

நவரத்தினத்துக்கு பாளையங்கோட்டை அன்னை திருமண மண்டபம் அருகே ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை