எருமப்பட்டி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த ஆசிரியர் கைது தம்பிக்கு போலீசார் வலைவீச்சு


எருமப்பட்டி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த ஆசிரியர் கைது தம்பிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Dec 2018 11:15 PM GMT (Updated: 2018-12-07T01:08:21+05:30)

எருமப்பட்டி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அவருடைய தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.

எருமப்பட்டி, 

திருச்சி மாவட்டம் ஊரக்கரையை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). இவர் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சவுந்தரி (46). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார்.

பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (44). இவருடைய தம்பி செல்வகுமார் (22). இவர்கள் இருவரும் காவக்காரப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து, சவுந்தரிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கணேசனிடம் இருந்து ரூ.4 லட்சத்து 98 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.


ஆனால் இதுநாள் வரையிலும் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாகவும் கணேசன் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story