மாவட்ட செய்திகள்

நெல்லையில் நினைவு நாளையொட்டிஅம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + The political party of the Ambedkar statue is anchored by the Malai

நெல்லையில் நினைவு நாளையொட்டிஅம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் நினைவு நாளையொட்டிஅம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் நினைவு நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லை, 

நெல்லையில் நினைவு நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ்-த.மா.கா.

அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.சரவணன், வர்த்தக அணி சக்சஸ் புன்னகை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ம.தி.மு.க.-தே.மு.தி.க.

ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் மருதம் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஒண்டிவீரன் முருகேசன் தலைமையிலும், மத்திய, மாநில அரசு எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையிலும், நீலம் பண்பாட்டு மய்யம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயேந்திர பிரசாத் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது சிலை சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள கடையில் இருந்த குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து சிலை மீது தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுதவிர சிலையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...