அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.69 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.69 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 7 Dec 2018 3:45 AM IST (Updated: 7 Dec 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.69¾ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை ஆனது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நேற்று அமாவாசையையொட்டி வழக்கத்தை விட காய்கறிகள் விற்பனை அதிகமாக நடைபெற்றது. காய்கறிகளை வாங்க அதிக அளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.

சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய உழவர் சந்தைகளில் 599 விவசாயிகள் தாங்கள் விளைவித்த 1 லட்சத்து 21 ஆயிரத்து 200 கிலோ காய்கறிகளை கொண்டு வந்தனர். இந்த காய்கறிகள் ரூ.38 லட்சத்து 49 ஆயிரத்து 945-க்கு விற்பனை ஆகி உள்ளது.

இதேபோல் ஆத்தூர், எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் 574 விவசாயிகள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 326 கிலோ காய்கறிகளை கொண்டு வந்தனர். இவை ரூ.31 லட்சத்து 35 ஆயிரத்து 425-க்கு விற்பனை ஆகி உள்ளது.

மாவட்டத்தில் உள்ள மொத்தம் 11 உழவர் சந்தைகளிலும் நேற்று 2 லட்சத்து 45 ஆயிரத்து 526 கிலோ காய்கறிகள் ரூ.69 லட்சத்து 85 ஆயிரத்து 370-க்கு விற்பனை ஆகி உள்ளது. 57 ஆயிரத்து 354 நுகர்வோர் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகள் வங்கி சென்றுள்ளனர்.

Next Story