அம்பேத்கர் நினைவு தினம்: சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
நாகர்கோவிலில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில்,
அம்பேத்கர் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் அவருடைய நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், நகர செயலாளர் சந்துரு, நிர்வாகிகள் விக்கிரமன், கிருஷ்ணன், இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் கேட்சன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகர செயலாளர் வக்கீல் மகேஷ், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜெரால்டு கென்னடி, வைகுண்டதாஸ், முருகானந்தம், ஏ.எம்.டி.செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் தேவ், நிர்வாகிகள் கணேசன், தர்மலிங்க உடையார், திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அலெக்ஸ், நிர்வாகிகள் சந்திரன், ஜாண்சேகர், வக்கீல் செண்பகவல்லி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவேந்தன், பகலவன் தலைமையில் ஏராளமானோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் சிறுத்தை தாஸ், கோபி, பால்சிங், ஜாண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுபாமுத்து தலைை-மையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சரத்சந்தர், மதன், முத்து வைரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Related Tags :
Next Story