மகன் கண் முன்பே மனைவியை கொன்று கணவர் தற்கொலை மகாபலேஸ்வர் ஓட்டலில் பயங்கரம்


மகன் கண் முன்பே மனைவியை கொன்று கணவர் தற்கொலை மகாபலேஸ்வர் ஓட்டலில் பயங்கரம்
x
தினத்தந்தி 7 Dec 2018 4:30 AM IST (Updated: 7 Dec 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

மகன் கண் முன்பே மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மகாபலேஸ்வர் பகுதியில் உள்ள ஓட்டலில் நடந்துள்ளது.

மும்பை, 

மகன் கண் முன்பே மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் மகாபலேஸ்வர் பகுதியில் உள்ள ஓட்டலில் நடந்துள்ளது.

இதுகுறித்த தகவல்கள் வருமாறு:-

மகன் கண்முன் கொடூரம்

சதாரா மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைவாச ஸ்தலமான மகாபலேஸ்வர் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் புனே விசரந்த் வாடி பகுதியை சேர்ந்த அனில் சிந்தே (வயது34) என்பவர் தனது மனைவி சீமா(30) மற்றும் 11 வயது மகன் ஆதித்யாவுடன் இங்கு சுற்றுலா வந்தார். மலையின் அழகை ரசித்த அவர்கள் இரவில் தாங்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்றனர். அப்போது கணவன், மனைவி இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

மகன் ஆதித்யா மட்டும் படுக்கைக்கு சென்று தூங்கிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் தாயின் அலறல் சத்தம் கேட்டு மகன் கண்விழித்துள்ளான்.

அப்போது தந்தை அனில் சிந்தே தாயை கத்தியால் குத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அவரிடம் தாயை ஒன்றும் செய்யவேண்டாம் என சிறுவன் கெஞ்சியும், கேட்காத அவர் சீமாவை சரமாரியாக குத்தி வீழ்த்தினார்.

பின்னர் தனது கழுத்தையும் அதே கத்தியால் அறுத்துக்கொண்டார்.

போலீசார் விசாரணை

இதைநேரில் நேரில் பார்த்து துடித்துப்போன சிறுவன் சம்பவம் குறித்து உடனடியாக ஓட்டல் மேலாளரிடம் சென்று கூறினான். அவர் ஊழியர்களின் உதவியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

தாய், தந்தை இருவரையும் இழந்த சிறுவன் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story