பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:12 PM GMT (Updated: 6 Dec 2018 11:12 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கினை விரைந்து முடிக்க வேண்டும், சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அகற்ற வேண்டும், மீண்டும் பாபர் மசூதியைஅதே இடத்தில் கட்ட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல்வஹாப் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை தலைவர்கள் முகம்மது சுலைமான், சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் பைரோஸ்கான் வரவேற்று பேசினார்.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக்சாகிப், பெண்கள் இந்தியா மாநில பொருளாளர் உம்முல்தவுலத்யா, மாவட்ட பொது செயலாளர் செய்யது இப்ராகிம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பசீர்அலி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வர்த்தக அணி தலைவர் தவமுனியசாமி,ராமநாதபுரம் நகர் தலைவர் அஜ்மல்சரீப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்முருகன், தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story