மாவட்ட செய்திகள்

குன்றத்தூர் ஒன்றியத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை + "||" + In Kundrathur Union BOMB, Pit Road Reform The public must request

குன்றத்தூர் ஒன்றியத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

குன்றத்தூர் ஒன்றியத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
குன்றத்தூர் ஒன்றியத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள படப்பை ஊராட்சியில் முக்கிய சாலையாக படப்பை- புஷ்பகிரி சாலை உள்ளது. ஊராட்சி ஒன்றிய சாலையான இந்த சாலை படப்பை, ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், சோமங்கலம், தாம்பரம், ஒரகடம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது.


இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. முக்கியமாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கும் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும், இ-சேவை மையம், பத்திரப்பதிவு அலுவலகம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது.

இந்த சாலையில் நடந்து செல்லக்கூடியவர்களும் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடனும் உயிருக்கு பயந்து வாகனத்தை ஓட்டும் நிலையில் செல்கின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை நகரில் குண்டும், குழியுமான சாலைகளால் மக்கள் அவதி சீரமைக்க வலியுறுத்தல்
தஞ்சை நகரில் குண்டும், குழியுமான சாலைகளால் அவதிப்பட்டு வரும் மக்கள், இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
2. ஒரகடத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஒரகடத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை