பள்ளி-கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும், என கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும், என கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
முகாம் நிறைவு நாள்
தூத்துக்குடியில், மத்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்திய தூய்மை பாரத இயக்கம் சிறப்பு விழிப்புணர்வு முகாமின் நிறைவு நாள் விழா, வ.உ.சி. கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். பின்னர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது;-
பிளாஸ்டிக் பொருட்கள்
தமிழக முதல்-அமைச்சர் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதை குறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மத்திய அரசின் முக்கிய திட்டமான தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துவது குறித்தும், சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி-கல்லூரிகளில்...
கை கழுவும் பழக்கத்தினை சிறுவயதில் இருந்து கடைப்பிடிக்க வேண்டும். கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்றிட பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கள விளம்பர உதவி அலுவலர் ஜெயகணேஷ், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பரிதாசெரின், மாநகராட்சி மாநகர நல அலுவலர் வினோத்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story