இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்


இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி - டிரைவர் கொலையில் கைதான வாலிபர் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2018 3:45 AM IST (Updated: 8 Dec 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

இரவில் விழித்து விடக்கூடாது என்பதற்காக, குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசமாக இருந்ததாக டிரைவர் கொலையில் கைதான வாலிபர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

உத்தமபாளையம், 

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி நேதாஜி காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 27). லாரி டிரைவர். அவருடைய மனைவி கலைமணி (19). இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி (25) என்பவருடன் கலைமணிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஈஸ்வரனை, உணவில் விஷம் கலந்து கொடுத்து கலைமணி கொலை செய்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக கள்ளக்காதலன் அழகர்சாமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஈஸ்வரன் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அழகர்சாமி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்ததாவது:-

சுருளிபட்டி நேதாஜி காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கம்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு அழகர்சாமி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக் கும் கலைமணியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் மீது காதல் ஏற்பட்டது. அவரிடம் தனது காதலை நேரடியாக கூற அழகர்சாமி தயங்கினார்.

ஒரு நாள், கலைமணியின் வீட்டு வாசலில் ஒரு கடிதம் கிடந்தது. அதில், கலைமணியை காதலிப்பதாக அழகர்சாமி எழுதி இருந்தார். அதனை படித்த கலைமணிக்கு அழகர்சாமி மீது காதல் ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்கள் நெருங்கி பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் வீட்டுக்கே அழைத்து வந்து அவருடன் கலைமணி உல்லாசமாக இருந்தார்.

இதுமட்டுமின்றி இரவு நேரத்தில் விழித்து விடக் கூடாது என்பதற்காக கலைமணியின் கணவர் ஈஸ்வரனுக் கும், பச்சிளம் குழந்தைக்கும் தூக்க மாத்திரை கொடுத்து வீட்டிலேயே அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். கலைமணியிடம், உன் கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருக்கும் என்று அழகர்சாமி கூறினார்.

இதையடுத்து தாலிக்கட்டிய கணவர் என்று கூட பராமல் உணவில் விஷம் கலந்து கொடுத்து, ஈஸ்வரனை கலைமணி கொலை செய்தார். அவர் இறந்த பிறகு 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தனர். அவருடைய சாவில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்ததால், 2 பேரும் ஊரை விட்டு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story